இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம்!
Saturday, July 31st, 2021
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை வென்றமைக்காக இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது.
இதில் 2 – 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.
அத்துடன், முன்னதாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.
00
Related posts:
கிரிக்கெற் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி !
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரப்படுத்தலில் கேன் வில்லியம்ஸன் முன்னேற்றம்!
பங்காளாதேஷ் 20க்கு20 தொடர்: பாகிஸ்தான் அணி வெற்றி!
|
|
|


