இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸங்க, புதிய சாதனை!
Thursday, February 15th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்க, புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.
அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பில் அதிவேகமாக இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
25 வயதான பெத்தும் நிஸங்க, 52 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை குவித்துள்ளார். ஆனால், விராட் கோஹ்லி 53 இன்னிங்சுகளிலேயே இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்திருந்தார்.
இதற்கு முன்னதாக, இலங்கை அணி சார்பில், உபுல் தரங்க 63 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் சுப்மான் கில் 38 இன்னிங்சுகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்ததே ஒட்டுமொத்த சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது!
ஆஷஸ்ஸில் சூதாட்டமா? ஐ.சி.சி விளக்கம்!
பொதுநலவாய போட்டியில் பாலித்தவுக்கு வெள்ளி - யுபுனுக்கு வெண்கலம்!
|
|
|


