இலங்கை அணி தோல்வி சிம்பாப்வே வெற்றி!

பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் 291 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஒவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதன்படி சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். திசர பெரேரா 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டென்டை சடாரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
Related posts:
இங்கிலாந்து அணியை எச்சரித்த பீட்டர்சன்!
தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா கிளிநொச்சியில்!
தெரிவுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர்!
|
|