இலங்கை அணியின் விபரம் வெளியானது!

இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கட்.போட்டிக்கான இலங்கை அணியின் 15 வீரர்கள் கொண்ட குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு சுகயீனம் காரணமாக அணியை ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார். இந்த குழாமில் 8 துடுப்பாட்ட வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர்.உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணவர்தன, நிரோஷன் திக்வெல், தனஞ்சயடி சில்வா மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.
தலைவர் ரங்கன ஹேரத்திற்கு மேலதிகமாக தில்ரூவான் பெரேரா மற்றும் மாலிந்த புஸ்பகுமார ஆகியோர் சுழற்பந்து வீச்சளர்களாக குழாமில் இடம்பிடித்துள்ளனர்.சுரங்க லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார மற்றும் விஸ்வ பெர்ணான்டோ ஆகியோர் வேக பந்து வீச்சளர்களாக அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் புதன் கிழமை காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது
Related posts:
|
|