இலங்கை அணியின் பயிற்சியாளராக நிக் போத்தாஸே!

Monday, October 30th, 2017

இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நிக் போத்தாஸ் நீடிப்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் இலங்கை அணி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் தொடர் முடிந்த பின்னர் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது.இந்த தொடருக்கு நிக் போத்தாஸே தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இலங்கை அணி தோல்வியை சந்தித்தாலும், நிக் போத்தாசுக்கு ஆதரவாக வீரர்கள் கருத்து வெளியிடுவதால் அவரே நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: