சானியா – ஹிங்கிஸ் ஜோடி பிரிகிறது!

Wednesday, August 10th, 2016

பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பிரிய முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள சானியா, கடந்த 5 மாதங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை ஈட்டமுடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டென்னிஸ் உலகில் இது சாதாரணமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜோடி சேர்ந்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியது. ஹிங்கிஸுடன் இணைந்த சானியா, உலகின் முதல்நிலை பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றார்.

இதையடுத்து உலகின் 21-ஆம் நிலை விராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் இணைந்து விளையாட சானியா மிர்சா முடிவு செய்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

Related posts: