இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க!

இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்படவுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான முன்னேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பங்களாதேஸுக்கு பயிற்சியளித்து வரும் ஹத்துருசிங்க, குறித்த அந்த பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளமையை பங்களாதேஸ் கிரிக்கட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்கும் பொருட்டே ஹத்துருசிங்க இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகள் தோல்வி!
நான் கெட்டவனா? ஊடகங்களை வறுத்தெடுத்த பிரபல வீரர்!
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!
|
|