இலங்கை அணிக்கு திரும்பினார் நட்சத்திர வீரர்: ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
Sunday, September 3rd, 2017
இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லக்மால் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கையுடன் மோதிய நான்கு ஒரு நாள் போட்டியையும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் 5வது ஒரு நாள் போட்டி செப்டம்பர் 3ம் திகதி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதுகு தசைப்பிடிப்புகள் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலே இலங்கை ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிப்பெறும் முனைப்பில் இலங்கை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!
கெயில், ஹெட்மையர் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி!
கராத்தே போட்டியில் சாதித்தது ஜோன்ஸ்!
|
|
|


