இலங்கை அணிக்கான தலைமைப்பயிற்றுவிப்பாளர் இவர்தான் ?

Friday, November 17th, 2017

பங்களா தேஷ் கிரிக்கட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க , பதவியில் இருந்து விலகி மீண்டும் இலங்கை வருவது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது அவர் குறிப்பிட்டதாவது , பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அதி கூடிய வேதனமொன்றை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் , நாட்டுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை குறித்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் , அப்படியென்றால் சந்திக ஹதுருசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர , அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை , சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதனை தொடர்ந்து பங்களாதேஷ கிரிக்கட் அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.எவ்வாறாயினும் , எதிர்வரும் 2019ம் ஆண்டு வரை ஹதுருசிங்கவின் ஒப்பந்த காலம் உள்ள நிலையில் இவரின் பதவி விலகல் கடிதம் குறித்த தொடர்ந்தும் பங்களாதேஷ் கிரிக்கட் அதிகாரிகளால் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவாராக இருந்தால், குறித்த வெற்றிடத்திற்கு இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்கலி நியமிக்கப்படலாம் என வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கங்குலிக்கு பங்களாதேஷ் அணி வீரர்களுடன் இணைந்து செயற்பட அவருக்கு பெங்காலி மொழி நன்கு தெரிந்துள்ளமை இதற்கு காரணமாகும் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

Related posts: