இலங்கையில் கிரிக்கெட் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது – அர்ஜுன ரணதுங்க!
Friday, July 2nd, 2021
இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள ரணதுங்க, தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் : 2-ஆவது சுற்றுக்கு செரீனா, கரோலினா தகுதி!
இந்திய மண்ணில் வென்றது அவுஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணி வெற்றி!
|
|
|


