இந்திய மண்ணில் வென்றது அவுஸ்திரேலியா!

Saturday, February 25th, 2017

புனேவில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 105 ஓட்டங்களுக்கு அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில்  சுருண்டது. இதில் ஓகீபே 6 விக்கெட்டுக்கள் பெற்றுகொண்டார்.

155 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்ரேலியா 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது.அவுஸ்ரேலிய அணி தலைவர் ஸ்மித் (109) சதத்தால் 285 ஓட்டங்கை பெற்றுக்கொண்டது. 440 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்கிஸ் இந்திய அணி களமிறங்கியது.

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார். விஜய் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓ கீபே பந்தில் ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆடுகளத்தினை விட்டு வெளியேறினார்.

அடுத்து வந்த புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் விராட் கோஹ்லி 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓ கீபே பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே (18), அஸ்வின் (8), சகா ஆகியோரை ஓ’கீபே வெளியேற்றினார்.

31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புஜாராவை 6 ஆவது விக்கெட்டாக ஓ’கீபே வெளியேற்றினார். அடுத்து வந்த இசான் சர்மா, ஜெயந்த் யாதவ் விக்கெட்டுக்களை லயன் வீழ்த்தினார். இந்தியா அணியினால் 33.5 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்து 107 ஓட்டங்களுக்கு அவுஸ்ரேலிய பந்து வீச்சில் சுருண்டது.

இதனால் அவுஸ்ரேலியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா 1-0 என முன்னிலையிலுள்ளது.

ஓ கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் வெற்றிக்கு இருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச்  4 ஆம் திகதி பெங்களூருவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

259475.3

Related posts: