இலங்கையணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் – சங்கக்கார!

Wednesday, May 18th, 2016
இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்­சிய அடை­யும்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்க­ளிப்பு செய்வார் என குமார்சங்­கக்­கார நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

”21 வயதே உடைய குசல் மெண்டிஸ் சாது­ரி­ய­மா­கவும் பந்து விழும் இடத்தை சரி­யாகக் கணித்தும் மிகவும் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தாடி வரு­கின்றார்.

அவரைக் கொண்டு கிரிக்கெட் அரங்கில் நிறைய எதிர்­பார்க்­கலாம். வரு­டங்கள் செல்ல செல்ல அவர் சிறப்பு வாய்ந்த ஒரு­வ­ராக உயர்வார்” என குமார் சங்­கக்­கார மேலும் தெரி­வித்தார்.
இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஆரம்­ப­மா­க­வுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொட­ருக்கு முன்­ப­தாக நடை­பெற்ற இரண்டு முதல்­தர கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் அரைச் சதங்கள் குவித்து தனது திற­மையை வெளிப்ப­டுத்­தி­யி­ருந்தார்.
இதனை அடுத்து குமார் சங்­கக்­கா­ர­விடம் இலங்கை அணி பற்றி கிரிக்­ இன்ஃபோ வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சரே பிராந்­திய அணிக்­காக முதலாம் பிரிவு கிரிக்கெட் வல்­லவர் போட்­டி­களில் குமரர் சங்­கக்­கார விளை­யா­டி­ வ­ரு­கின்றார்.தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட குமார் சங்­கக்­கார, ”ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் விளை­யா­டு­வ­துடன் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவர் பெரும் பங்­காற்­றுவார் எனக் கரு­து­கின்றேன்.

தினேஷ் சந்­திமால், அணியில் இடம்­பெ­று­வாராக இருந்தால் லஹிரு திரி­மான்ன ஆகி­யோ­ருக்கு இந்தத் தொடர் சிறப்பு முக்­கி­ய­மா­ன­தாகும். அவர்கள் போன்­ற­வர்கள் அணியில் இடம்­பெ­று­வ­தற்கு தங்­க­ளது திற­மையை நிரூ­பிக்க இது சிறந்த சந்­தர்ப்­ப­மாகும்.

இலங்கை அணிக்கு அவர்கள் இரு­வ­ரையும் மிகச் சிறந்த வீரர்­க­ளா­கவே நான் பார்க்­கின்றேன். இருவ­ருமே முதிர்ச்­சியும் அனு­ப­வமும் மிக்க வீரர்கள். இன்னும் பல வரு­டங்­க­ளுக்கு துடுப்­பாட்ட வரி­சையில் முக்­கிய பங்­காற்­றக்­கூ­டி­ய­வர்கள்” என குமார் சங்­கக்­கார மேலும் தெரி­வித்தார்.
”இள­மை­மிக்க நிரோஷன் டிக்­வெல்ல, தனஞ்­செய டி சில்வா ஆகி­யோரும் குழா­மில இடம்பெறுகின்றனர். தனஞ்­செய டி சில்வா ஒரு­கா­லத்தில் விக்­கெட் ­காப்­பா­ள­ரா­கவும் இப்­போது சிறந்த துடுப்­பாட்­டக்­கா­ர­ரா­கவும் பிர­கா­சித்து வரு­கின்றார்.

அத்­துடன் திற­மை­யான ஓவ் ஸ்பின் பந்­து­வீச்­சா­ள­ரு­மாவார். எனினும் இயல்பு, நுட்­பத்­திறன், உளப்பாங்கு ஆகி­யன கடும் சோத­னை­யா­கத்தான் இருக்கும். அவர்­க­ளுக்கு இது ஆழ­மான பாட­மாக அமை­ய­வுள்­ளது. ஆனால் விரை­வாக சக­ல­தையும் கற்­றுக்­கொள்­வார்கள் என நினைக்­கின்றேன்” என்றார்.
”குழாமில் வேகப்­பந்­து­வீச்­சாளர் துஷ்­மன்த சமீ­ரவும் இடம்­பெ­று­கின்றார். அவர் ஓர் உத்­வேகம் மிக்க வீரர். அவர் 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்­து­வீசக் கூடி­யவர். அவர் அணிக்கு பாரிய பங்­க­ளிப்பு செய்வார் என நம்­பு­கின்றேன். கட்­டுப்­பாட்­டு­டனும் படு­வே­க­மா­கவும் பந்து வீசக் கூடியவர்.

அவரும் எதிரணிக்கு பலத்த சவாலாகத் திகழ்வார். எனவே இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டில் பிரகாசத்தை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக் கின்றது” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

Related posts: