இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து தென்னாபிரிக்க அணியின் பிரபல வீரர் திடீர் விலகல்!
Thursday, June 21st, 2018
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து தென்னாபிரிக்க அணி வீரர் கிரிஸ் மொரிஸ் திடீரென விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக 20 வயதான சகலதுறை ஆட்டக்காரர் வியான் மல்டர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இதேபோல் இம்ரான் தாஹிருக்கு இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக கேசவ் மகாராஜ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்தமாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான 20க்கு 20 போட்டி ஒன்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தானுக்கு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
ஜேர்மனியை வீழ்த்தியது ஜப்பான் - உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தொடர்கின்றது அதிர்ச்சி!
|
|
|


