ஜேர்மனியை வீழ்த்தியது ஜப்பான் – உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தொடர்கின்றது அதிர்ச்சி!
Thursday, November 24th, 2022
கட்டார் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணியான ஜப்பான், பலம்வாய்ந்த ஜேர்மனி அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
நேற்று ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஜப்பானிடம் ஜேர்மனி தோல்வி கண்டுள்ளது.
போட்டியின் முதல் பாதியில் சிறப்பாக செயற்பட்ட ஜேர்மன் அணி கோல் ஒன்றைப் போட்டு முன்னிலை பெற்றிருந்த போதிலும், இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய ஜப்பான் இரண்டு கோல்களைப் போட்டது.
இதன்பிரகாரம் போட்டியின் இறுதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜப்பான் ஈ குழுவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், இன்றைய போட்டியில் ஜப்பான் அணியின் கோல் காப்பாளர் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
Related posts:
இலங்கை அணியின் விஷேட பயிற்சியாளராக வருகின்றார் வசீம் அக்ரம்!
ஐ.சி.சி.யின் தரவரிசையில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தான்!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 20 - 20 தொடரை வென்றது இலங்கை !
|
|
|


