உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் வெல்லும் என்கிறார் கங்குலி!

Thursday, May 16th, 2019

நடைபெறவுள்ள உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்து தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கணிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கங்குலி கூறுகையில், ‘பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் சிறப்பாக விளையாடும். அதற்கு காரணமும் இருக்கிறது. 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் சாம்பியன்.

2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும், இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது. அது தவிர இப்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வருகிறது.

எனவே பாகிஸ்தான், இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடும். உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோஹ்லியின் பெங்களூரு அணி ஐ.பி.எல்-யில் தோற்றாலும், அது இந்தியாவை பாதிக்காது’ என தெரிவித்துள்ளார்

Related posts: