இறுதிப்போட்டிக்கு ஊரெழு றோயல் தகுதி!
Tuesday, October 18th, 2016
வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைபந்தாட்டத் தொடரில் (14.10.2016) குப்பிளான் விக்னேஸ்வர விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற அரை இறுதியில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி மோதியது. 1ஆவது பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடியது. முதல் பாதியாட்டத்தில் எவ்வித கோல்களும் பெறப்படாத நிலையில் ஆட்டம் நிறைவுற்றது.
2ஆவது பாதியாட்டத்தில் வெற்றியை நோக்கி ஆட்டத்தை வேகப்படுத்திய றோயல் அணி 41 ஆவது நிமிடத்தில் அணியின் வெற்றி கோலை பதிவ செய்தார். நிதர்சன் இறுதியாட்ட நேர முடிவில் 01:00 என்ற ரீதியில் யங்கம்பன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது றோயல் அணி. றோயல் அணி சார்பாக நிதர்சன் 01 கோல் போட்டார்.

Related posts:
|
|
|


