ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு அம்பலம்!

Saturday, August 10th, 2019

கனடாவில் இடம்பெறும் ‘க்ளோபல்’ இருபதுக்கு ௲ 20 லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே பணத்திற்காக ஆட்ட நிர்ணயம் எனது நாட்டின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை நாடியதாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மன்சூர் அக்தார் எனும் முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் இவ்வாறு உமர் அக்மலை போட்டி நிர்ணயத்தில் ஈடுபட ஊக்குவித்ததாக குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த போட்டிகளில் உமர் அக்மால் ‘வினிபெக் ஹோக்ஸ்’ அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்ததோடு, மன்சூர் அக்தார் குறித்த அணியின் அதிகாரியாக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக சபை, ‘க்ளோபல்’ இருபதுக்கு -20 லீக் கிரிக்கெட் போட்டிகளது நிர்வாக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இனது ஊழல் எதிர்ப்பிற்கு உமர் அக்மல் அறியப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ள மன்சூர் அக்தார் 1980 வருடம் முதல் 1990 வருடம் வரையில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 19, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 41 என விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: