இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ஹோட்டலில் சடலமாக மீட்பு!
Monday, January 30th, 2017
இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜேஷ் சாவந்த் (40), இவர் இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வந்த ராஜேஷ் சாவந்த், இன்று காலை பயிற்சி அளிப்பதற்கு மைதானத்திற்கு சமூகமளிக்காமையால் அவரை அங்கிருந்தவர்கள் தேடிய போது சாவந்த் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து உடல் மீட்கப்பட்டது.
ராஜேஷ் சாவந்த், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக மும்பை பொலிஸ் தெரிவித்தது

Related posts:
ஜோகோவிச் ஓய்வெடுக்க முடிவு !
42 நாள்களில் 5 டெஸ்ட்கள் - கேலிக்குரியது என்று கொதிக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்!
விராட் கோஹ்லி படைத்த வியக்கவைக்கும் சாதனைகள்!
|
|
|


