இந்தியா முதல் இன்னிங்ஸில் 566 ஓட்டங்கள்!

Saturday, July 23rd, 2016

இந்தியா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான   முதல் டெஸ்ட் போட்டியில் முதல்  இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 566 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இந்திய அணி சார்பில்  சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 200 ஓட்டங்களை பெற்றதோடு, ரவிச்சந்திரன் அஸ்வின்  113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில்  பிராத்வைட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை முதல் இன்னிங்ஸை தொடர்ந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில்  1 விக்கட்டினை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts: