இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது அவுஸ்திரேலியா!
Friday, March 1st, 2019
இரண்டாவது 20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் அதிரடி சத்தத்தால் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்தது.
இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதிரடி காட்டி 47 ரன்கள் குவிக்க, மறுமுனையில் களமிறங்கி இந்திய அணிய கேப்டன் விராட்கோஹ்லி 72 ரன்களும், டோனி 40 ரன்கள். இதனையடுத்து பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் வழக்கம் போல வந்த வேகத்திற்கு வெளியில் சென்றார்.
அதன்பிறகு ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக நொறுக்க ஆரம்பித்தார்.
மைதானத்தின் நாலாபுரத்திலும் பந்துகளை பறக்கவிட்ட மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 115 ரன்களை குவித்து கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் இழந்துள்ளது. அதேசமயம் இந்திய மண்ணில் இருபது ஓவர் தொடரை முதன்முறையாக வென்று அவுஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
Related posts:
|
|
|


