சென். ஜோன்ஸ் மகுடம் சூடியது!

Tuesday, February 20th, 2018

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 13வயதுப்பிரிவுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம்இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் சென். ஜோன்ஸ் கல்லூரி “ஏ” அணியைஎதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 7 இலக்குகளை இழந்து 292ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அபிசேக் 149ஓட்டங்களையும், எபநேசர் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.தனது முதலாவது இன்னிங்ஸிக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 58 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பந்துவீச்சில்

அபிசேக் 4 இலக்குகளையும், விதுசன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி நாள் முடிவில் 57ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து நாள் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை

பெற்றதை அடுத்து யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.பந்துவீச்சில் அபிசன், அஸ்னாத் ஆகியோர் தலா இரு இலக்குகளை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும்சென். ஜோன்ஸ் கல்லூரியின் அபிசேக் தெரிவானார். சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் டதுஸ்ரன் தெரிவானார்.

Related posts: