இந்தியாவுக்கு டிராவிட்டை விட சிறந்தவர் யார்? – ரிக்கிபாண்டிங்

Thursday, May 19th, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பொருத்தமானவராக இருப்பார். இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை சார்ந்தது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கிபொண்டிங் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாராக இந்தியர் இருக்க வேண்டுமா? அல்லது வெளிநாட்டவர் இருக்க வேண்டுமா? இதில் எதை கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது என்பது தெரியவில்லை. மேலும் அணியின் தலைவர் என்ன  நினைக்கிறாரோ என்று தெரியவில்லை.

ஆனால் டிராவிட்டை விட சிறந்த பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பது கடினம் என்றே நினைக்கிறேன்.

பயிற்சியாளராக செயல்பட அவர் விரும்பினால், அதை அவர் சிறப்பாக செய்வார். அனுபவம் வாய்ந்த டிராவிட் கிரிக்கெட் நுணுக்கம் அதிகம் தெரிந்தவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர். இவ்வாறு பாண்டிங் கூறினார்.

Related posts: