பங்களாதேஷ் தொடரை வென்றது இங்கிலாந்து!

Friday, October 14th, 2016

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து 2 -1  என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே தொடர் 1—1 என்று சமநிலையில் இருந்த நிலையில் 3 வதும் இறுதியுமான போட்டியை வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி தொடரை 2–1 என்று சொந்தமாக்கியது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் களத்தடுப்பு தீர்மானத்தை மேற்கொண்டார், அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டம் இழக்காது 69 ஓட்டங்களையும், தமீம் இக்பால் 45, இம்ருல் கயிஸ் 46, சபீர் ரஹ்மான் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.தமீம் இக்பால் பெற்றுக்கொண்ட 45 ஓட்டங்கள் துணையுடன் பங்களாதேஷ் சார்பில் ஒருநாள் போட்டிகளில் 5000 ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் எனும் பெருமை பெற்றார்.

இங்கிலாந்து அணிக்கு 278 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் புதுமுக இலம் வீரர்கள் சாம் பில்லிங்ஸ், பென் டக்கட் ஆகியோரின் அரைச்சதம் கைகொடுக்க சகலதுறை வீரர்கள் பென் ஸ்ரோக்ஸ், கிரிஸ் வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கெதிராக ஒருநாள் தொடர்களை வெற்றிகொண்ட பங்களாதேஷ் அணியின் வெற்றி பயணத்தை இங்கிலாந்து முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

england_2993369f

Related posts: