இந்தியாவின் தங்க மகன் விடைபெற்றார்!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்.
பீஜிங்கில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 10 மீற்றர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா.தனி நபர் பிரிவில் இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற முதல் தங்கமும் அதுதான். இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அபினவ், 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தை பறிகொடுத்தார்.
இதன் பின்னர் விரக்தியில் இருந்த அபினவ், தான் ஓய்வு பெறப் போவதாகவும், இனி மேல் துப்பாக்கியை தொடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபினவ், தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Related posts:
ஐ.பி.எல். தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுளைந்தது குஜராத் !
சேற்றுநில ஒலிம்பிக் போட்டியில் 4000 வீரர்கள் பங்கேற்பு!
இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமைப் படுத்தப்பட்டேன் – அஸ்வின்!
|
|