இந்தியன் ப்ரீமியர் லீக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
Thursday, March 28th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
அமீரிடம் கால்பந்து கையளிப்பு!
ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் வியாஸ்காந்த் - ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கு...
|
|
|


