ஒப்பந்தத்துக்கு எதிராக கொந்தளிக்கும் ஃபியட் ஊழியர்கள்!

Friday, July 13th, 2018

உலக கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான ரொனால்டோவை 100 மில்லியன் யூரோவுக்கு இத்தாலியின் யுவான்டஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

டூரின் நகரைச் சேர்ந்த யுவான்டஸ் அணியின் உரிமையாளர்தான் ஃபியட் கார் நிறுவனத்தின் உரிமையாளர். 100 மில்லியன் யூரோ செலவிட்டு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு ஃபியட் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யுவான்டஸ் அணி உரிமையாளரும் ணிஙீளிஸி குழுமத் தலைவருமான ஜியோவானி அக்னெல்லியின் செயலைக் கண்டிக்கும் வகையில் வரும் ஜூலை 15 முதல் 17 வரை 3 நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக ஃபியட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஃபியட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்துக்காக பல்வேறு பொருளாதார இழப்புகளைத் தாங்கிக் கொண்டு நாங்கள் பணிபுரிந்து வருகிறோம் அதே நிறுவனம் மில்லியன் கணக்கில் யூரோக்களை தனி மனிதருக்காக கொட்டிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஒருவர் மில்லியன் யூரோவில் குளிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மாதக் கடைசியில் கையில் பணம் இல்லாமல் உள்ளோம்.

நாங்களும் அதே உரிமையாளரிடம்தானே பணிபுரிகிறோம். ஏன்… இத்தனை வேறுபாடு காட்டப்படுகிறது. ஒருவருக்காக நிதியை முடக்குவதைக் காட்டிலும் புதிய வகைக் கார்களை அறிமுகப்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதிலும்தான் நிதியை முதலீடு செய்ய வேண்டும். முதலில் ஊழியர்களுக்குதான் நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் விளையாட்டு, சினிமா போன்றவை எல்லாம்.

இந்தக் காரணத்துக்காக ஜூலை 15-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணியிலிருந்து ஜூலை 17-ம் திகதி செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: