இங்கிலாந்தின் பதிலடிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்தியா!

Monday, November 28th, 2016

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் மொகாலியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், பார்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முரளி விஜய் (12) நிலைக்கவில்லை. அடுத்து பட்டேல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.சிறப்பாக விளையாடி வந்த பட்டேல் 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாராவுடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார்.

51 ஓட்டங்கள் எடுத்து புஜாரா ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரகானே (0), கருண் நாயர் (4) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 156 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

அணித்தலைவர் கோஹ்லி அரைசதம் கடந்து 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

நெருக்கடியான நிலையில் களமிறங்கிய அஸ்வின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜடேஜா முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அஸ்வின் அரை சதத்தால் இந்தியாவின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.

இந்த ஜோடி 2வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்தை விட 12 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது.

82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாக இன்றைய தினத்தை முடித்த ஆல்-ரவுண்டர் அஸ்வின் இந்த ஆண்டில் 500 ஓட்டங்கள் 50 விக்கெட்டுகள் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.ஜடேஜா 31 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இந்த ஜோடி இதுவரை 7வது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொயின் அலி விக்கெட் எடுக்காவிட்டாலும் 9 ஓவர்களில் 19 ஓட்டங்களே விட்டுகொடுத்தார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: