தேசிய மட்ட கராட்டி போட்டி:  தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர்!

Tuesday, August 2nd, 2016

தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்.

திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில்  கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார்.

ஆண்களுக்கான தனிநபர் காட்டாவில் கல்முனையை சேர்ந்த எஸ்.பால்ராஜ் தங்கப்பதக்கத்தினையும், ஆலையடிவேம்பை சேர்ந்த கே.சாரங்கன் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றதுடன், ஆண்களுக்கான குழுக்காட்டாவில் கே. சாரங்கன், கே.ரஞ்சி, எஸ்.சோபனா ஆகியோர் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான தனிநபர் காட்டாவில் கே.அட்சயா வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களில் மூவர் ஆலையடிவேம்பு செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த ராம் கராத்தே சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களுக்கான பயிற்சியினை ராம் கராட்டி சங்கத்தின் இலங்கைக்கான போதானசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: