ஆஸி அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர்!

Friday, May 4th, 2018

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அதற்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டேரன் லிமேன் பதவி விலகினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் (47) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் மன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜஸ்டின் லேங்கர் தேசிய அணிக்காக 105 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Related posts: