ஆஸி அணியின் இரு முக்கிய வீரர்கள் நீக்கம் !
Friday, August 10th, 2018
இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹஸில்வுட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்திருந்த அவர்கள் இன்னும் பூரண குணமடையவில்லை என அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் அவர்களுக்கு பதிலாக இணைக்கப்படவுள்ளவர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.
எனினும் மிச்சல் ஸ்டாக் உள்வாங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
கால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்!
அமெரிக்க ஓபன் - சாம்பியன் பட்டம் வென்ற பியான்கா!
விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!
|
|
|


