அஸ்வின் அசத்தல்! சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

Wednesday, August 10th, 2016

இந்தியா- மேற்கிந்தி தீவுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்று (9)தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிதலைவர் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார்.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும், தவானும் களம் இறங்கினார்கள். தவான் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து 50 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த ரோகித் சர்மா 9 ஓட்டங்களில் வெளியேறினார்.

இந்நிலையில் ரகானேவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். 35 ஓட்டங்களில் ராகனே ஆட்டம் இழக்க, இந்தய அணி 126 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அடுத்த களமிறங்கிய சாஹா அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து நிதனமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் எடுத்தது. அஸ்வின் 75 ஓட்டங்களுடனும், சாஹா 46 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற வெற்றி கணக்கில் முன்நிலையில் உள்ளது, மூன்றாவது டெஸ்டில் வெற்றிப்பெற்றால், இந்தியா தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: