ஆறு ஆண்டுகளின் பின் மீண்டும் முகமது ஆமிர்!
Monday, June 6th, 2016
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார்.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இதில் டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த அணியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரவரிசையில் கோலி முன்னேற்றம்!
கௌதமன் - மதுசன் அசத்தல்: காலிறுதியில் யாழ்.மத்திய கல்லூரி!
ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் - இலங்கை முதல் போட்டியில் தோல்வி!
|
|
|


