ஆடுகளம் உரிய தரத்துடன் இருக்கவில்லை – பங்களாதேஸ் கிரிக்கட் சபை!

டாக்காவில் உள்ள மீர்பூர் – செரே பங்களா தேசிய மைதானத்தின் சர்வதேச கிரிக்கட் பேரவைத் தரப்படுத்தலுக்கு எதிராக பங்களாதேஸ் கிரிக்கட் சபை விண்ணப்பித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஆடுகளம் உரிய தரத்துடன் இருக்கவில்லை என்று, சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்திருந்தது. அத்துடன் குறித்த மைதானத்துக்கு 1 தண்ட புள்ளியையும் வழங்கி இருந்தது.
இதற்கு எதிராக பங்களாதேஸ் கிரிக்கட் சபை தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் எதிர்வரும் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தோல்விக்கு முடிவுகட்டி வெற்றி பெறவிரும்புகிறோம் - ஸ்மித்!
ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
டெஸ்ட் உலகக் கிண்ணம் நடத்தப்படுவது மிகச் சிறந்தது - இலங்கை அணித் தலைவர்!
|
|