ஆசிய கிண்ணத் தொடர் – இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி!
Friday, September 15th, 2023
ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை டக்வத் லூயிஸ் முறையில் 2 விக்கட்டுக்களால் வீழ்த்திய இலங்கை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டியை மீள ஆரம்பிப்பதற்கு நீண்ட நேரமானதால், 42 ஓவர்களாக குறித்த போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு டக்வத் லூயிஸ் முறையின் மூலம் 42 ஓவர்களில் 252 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய, இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குஷல் மெண்டிஸ் அதிகபட்சமாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை, இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


