ஆசியக் கோப்பை இந்தியாவில் இல்லை!

Friday, April 13th, 2018

ஆசிய கிரிக்கெட் சபையில், நிறைவேற்று வாரியத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினடிப்படையில், இந்திய பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கிடையான அரசியல் இராஜதந்திர புரள்வு நிலை தொடர்வதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ண தொடரை இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பாகிஸ்தானின் பங்கேற்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. BCCIயும் இந்த முடிவுக்கு இணங்கியுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களான டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும்.

இந்த தொடரில் ஐ.சி.சியின் முழு அங்கீகாரம் பெற்ற உறுப்புரிமை நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளோடு ஆறாவது அணியாகத் தெரிவாகும் ஒரு புதிய அணி என ஆறு அணிகள் பங்கேற்கும்; குறித்த ஆறாவது அணிக்கான தகுதிகாண் போட்டியில் அண்மையில் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தைத் தாமதாக்கிய நேபாளம், மலேசியா, போட்டியை நடாத்தும் நாடான ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், கொங் கொங், ஓமான் ஆகிய நாடுகள் ஆறாம் அணிக்காக போட்டியிடவுள்ளன. ஆசியக் கிண்ண தொடர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது 14வது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடராகும். கடந்த ஆசியக் கிண்ணத் தொடரைத் தவிர எண்ணிய அனைத்தும் 50 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இடம்பெற்றிருந்தன. கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: