அஸ்வின் முன்னேற்றம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இலங்கை அணிக்கெதிராக கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 16.4 ஓவர்கள் வீசி 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த பெருமையை பெற்றுக்கொண்டார்.
இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலாம் இடத்தில் உள்ளார். உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.
அஸ்வின், 51 போட்டிகளில் 96 இன்னிங்சில் 26 முறை 5 விக்கெட்டுக்களும், 7 முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். அத்தோடு இதற்கு முன்னதாக 103 போட்டிகளில் 190 இன்னிங்சில் 25 முறை ஐந்து விக்கெட்டுக்களும், 5 முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்த ஹர்பஜன் சிங்கின் தரவரிசையையும் அஸ்வின் தகர்த்துள்ளார்.
சர்வதேச அளவில் முத்தையா முரளிதரன் 67 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். ஷேன் வோர்ன் 37 முறை 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2வது இடத்திலும், ஹெட்லி 36 முறை வீழ்த்தி 3வது இடத்திலும், அனில் கும்ப்ளே 35 முறை வீழ்த்தி 4வது இடத்திலும், ஹேரத் 31 முறை வீழ்த்தி 5வது இடத்திலும், மெக்ராத் 29 முறை வீழ்த்தி 6வது இடத்திலும், போத்தம் 27 முறை வீழ்த்தி 7வது இடத்திலும், அஸ்வின் மற்றும் ஸ்டெயின் 26 முறை வீழ்த்தி 8வது இடத்திலும் உள்ளனர்.
Related posts:
|
|