சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஆப்கான் வீரர்!

Friday, July 5th, 2019

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ராம், ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் அரைசதம் விளாசிய இக்ராம், சச்சினின் சாதனையை முறியடித்தார்.

நேற்று லீட்ஸ், ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில், ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்-மேற்கிந்தியதீவு அணிகள் மோதின. இதில். மேற்கிந்திய தீவு அணியிடம் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. உலகக் கோப்பை தொடரில் ஒரு வெற்றிக் கூட பெறாமால் ஆப்கான் அணி தனது உலகக் கோப்பை பயணத்தை நிறைவு செய்தது.

இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர் இக்ராம் 86 ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் 18 அல்லது அதற்கு குறைந்த வயதில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளினார் இக்ராம்.

உலகக்கோப்பை அரங்கில் அதிக ஓட்டங்கள் எடுத்த இளம் வீரர்கள் பட்டியலில், 2019 ஆம் ஆண்டு 18 வயது 278 நாட்களில் 86 ஓட்டங்கள் அடித்து இக்ராம் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு 18 வயது 323 நாட்களில் 84 ஓட்டங்கள் அடித்து சச்சினும், 1992 ஆம் ஆண்டு 18 வயது 318 நாட்களில் 81 ஓட்டங்கள் அடித்து சச்சினே மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

Related posts: