அஸ்வின் மட்டுமே தலைசிறந்த சுழல்பந்து வீரர் – முரளிதரன்!

Thursday, November 30th, 2017

தற்போது விளையாடிவரும் வீரர்களில் அஸ்வினே ஆகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளர் என்று தெரிவித்தார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன்.

இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 8 இலக்குகளைக் கைப்பற்றி இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கினார் அஸ்வின். இந்த 8 இலக்குகளின் உதவியுடன் பன்னாட்டு டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 300 இலக்குகளைக் கைப்பற்றிய வீரர் என்ற அடைவையும் அவர் நிலைநாட்டினார். இந்தச் சாதனைக்காக அஸ்வினுக்கு பல தரப்புக்களிடம் இருந்தும் பாராட்டுக் குவிந்து வரும் நிலையில் முன்னாள் சுழல் ஜாம்பவான் முரளிதரனும் அஸ்வினை வெகுவாகவே பாராட்டியுள்ளார்.

“தற்போது விளையாடிவரும் வீரர்களில் ஆகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தற்போது அஸ்வின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இல்லை. விரைவில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களுக்கான அணிகளிலும் இடம்பிடித்து ஆச்சரியங்களை நிகழ்த்துவார்” என முரளி மேலும் தெரிவித்தார்.

Related posts: