அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் – புள்ளிகளும் குறைப்பு!
Friday, June 23rd, 2023ஆஷஸ் தொடரின் பர்மிங் ஹாம் டெஸ்ட்டில், பந்துவீச்சை தாமதம் செய்ததாக அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டன.
மேலும், அவற்றின் வீரர்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருக்கும் ஆஷஸ் தொடர், கடந்த 16 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமானது.
பர்மிங்ஹாமில் நடைபெற்ற அந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்ரேலியா 2 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின்போது இரு அணிகளுமே தங்களது பந்துவீச்சின் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2 பந்துப்பரிமாற்றங்கள் குறைவாக வீசியிருந்ததாக அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதத்தையும் ஆட்டநடுவரான ஆண்டி பைகிராப்ட் அபராதமாக விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


