அவங்க என்ன வேணுமானாலும் பேசிட்டுப் போகட்டும்- பாபர் ஆசம்மிடம் கூறிய இம்ரான் கான்!

Sunday, October 24th, 2021

………..
வெளியில் பேசப்படும் பேச்சுக்களிற்கு செவிசாய்க்கவேண்டாம் என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார் என பாக்கிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்
பாபர் அசாம் தலைமை பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவையும் சந்தித்தனர்.
இன்று அக்.24ம் தேதி இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது, பாபர் அசாம் – விராட் கோலி யார் பெஸ்ட் என்பதாக சமூக ஊடகங்கள் முதல் அனைத்திலும் வைரலாகி வருகிறது இந்தப் போட்டிக்கான பில்ட்-அப். இந்நிலையில் வெளியில் பேசப்படும் பேச்சுக்களுக்கும், சப்தங்களுக்கும் செவி சாய்க்க வேண்டாம் என்று கேப்டன் பாபர் அசாமிடம் பிரதமர் இம்ரான் கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாபர் அசாம், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இங்கு வரும் முன் இம்ரான் கானைச் சந்தித்தோம் அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 1992 உலகக்கோப்பையின் போது அவருடைய மன நிலை என்னவாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் உடல் மொழி எப்படி இருந்தது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
ரமீஸ் ராஜாவும், கூலாக ஆடினால் எளிமையாக அனைத்தையும் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். வெளியே என்ன பேசினாலும் அது அங்கேயே இருக்கட்டும், அது அணிக்குள் வர வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து 100% கொடுங்கள் என்றார் ரமீஸ்.” என்றார் பாபர் அசாம்.
கடந்த 5 ஆண்டுகளில் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் முதல் டி20 போட்டியாகும் இது. 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு முதல் போட்டி. உலகக்கோப்பைகளில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை 12 போட்டிகளில் 12-ஐயும் இந்தியா வென்றுள்ளது, இந்த முறையும் இதுவே தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று இரவு துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும் போது நிலவரம் மின்கம்பியைத் தொடுவது போல இருக்கும் இப்போதே இந்தியா வெற்றி பெற யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பாபர் அசாம் கூறுவது போல் வெளியே நடப்பவை வெளியேயாகவே இருக்க வேண்டும், அணிக்குள் பிரவேசிக்கக் கூடாது, இரு அணிகளும் நல்ல நட்புறவுடனும் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

Related posts: