அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி சம்பியன்!

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணியை எதிர்த்து வாயவிளான் மத்திய கல்லூரி அணி மோதியது.
இரண்டு செற்களிலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
1 ஆவது செற்றில் பலத்த போராட்டத்தில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 ஆவது செற்களில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இருப்பினும் 2 ஆவது செற்றிலும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
Related posts:
|
|