அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கை வீரர் புபுது தசநாயக்க நியமனம்..!
Friday, September 9th, 2016
இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நியனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தசநாயக்க, அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளராக செயற்பட எனக்கு வாய்ப்பளித்தமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க இதுவொரு அற்புதமான தருணமாகும்.
இங்கு திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். கடின உழைப்பின் மூலம் இந்நாட்டில் கிரிக்கெட்டை உயர் தரத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். அடுத்த மாதம் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரை லொஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியை சிறந்த சிரேஷ்ட வீரர்களை கொண்டு ஆயத்தப்படுத்துவதே எமது முதல் இலக்காகும். இத் தொடரை வெற்றியுடன் ஆரம்பிப்பதே எமது பயணத்தில் முதல் படிக்கல்லாகும் என்றார்.

Related posts:
|
|
|


