அமெரிக்காவின் பிரபல ஃகோல்ப் வீரர் கைது!
Wednesday, May 31st, 2017
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவின் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் ஜூபிடர் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 7.18 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எழுத்துமூல ஆவணத்தில் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சில மணிநேரங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வூட்ஸ் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இரசிகர்களிடத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். 14 முறை சம்பியன் பட்டம் வென்றிருந்த டைகர் வூட்ஸ், காயம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து முக்கிய ஃகோல்ப் தொடர்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் சங்கக்காரவின் அணி வெற்றி!
திலக்கரட்ன தில்ஷானின் அடுத்த அவதாரம்!
இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க டெஸ்ட் அணி வீரர்கள் அறிவிப்பு!
|
|
|


