அணியிலிருந்து வெளியேற்றப்படுவாரா டோனி – குழப்பத்தில் பி.சி.சி.ஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியிலிருந்து புறக்கணிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
38 வயதான டோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை இந்திய அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related posts:
|
|