அறிமுக போட்டியிலே அசத்திய டிமிட்ரோவ்!

Wednesday, November 22nd, 2017

இலண்டனில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரிய வீரரான டிமிட்ரோவ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. டாப் –  8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 26 வயதான கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா)-டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2லு மணி நேரம் நீடித்தது. முதல் இரண்டு செட்டிலும் இருவரும் மாறி, மாறி புள்ளி குவித்ததால் பரபரப்பு நிலவியது.கடைசி செட்டில் டிமிட்ரோவ் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் டிமிட்ரோவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

உலக போட்டியில் முதல்முறையாக கால் பதித்த டிமிட்ரோவ் முதல் முயற்சியிலேயே பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார். 1998-ம் ஆண்டில் ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் கொரெட்ஜா முதல் முயற்சியிலேயே பட்டம் வென்று இருந்தார். அதன் பிறகு அறிமுக போட்டியிலேயே பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை டிமிட்ரோவ் பெற்றுள்ளார்.தரவரிசையில் முன்னேற்றம்.தோல்வியை சந்திக்காமல் பட்டத்தை வென்ற டிமிட்ரோவுக்கு ரூ.16 கோடி ரொக்கப்பரிசும், 1,500 தரவரிசை புள்ளியும் கிடைத்தது.இந்த வெற்றியின் மூலம் டிமிட்ரோவ் உலக ஒற்றையர் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்

Related posts: