அணித்தலைவர் பதவியிலிருந்து குக் இராஜினாமா!

Tuesday, February 7th, 2017

 

இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டெயார் குக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டது. இதனால் இங்கிலாந்து அணி புதிய தலைவரைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேப்டன் பதவியை ஏற்ற குக், 2013 மற்றும் 2015 இல் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றவர். இவரது தலைமையில் 2012 இல் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது.

சமீபத்தில் இங்கிலாந்து அணி இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா தொடரை 4-0 எனக் கைப்பற்றியது. இதனால் குக்கின் தலைவர் பதவிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் குரோவ்ஸை குக் சந்தித்தார்.அதன்பின், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் ஸ்டாரஸை சந்தித்தார். அப்போது தான் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பேன் என்றும் அலஸ்டெயார் குக் கூறியுள்ளார்.

தற்போது வரை டெஸ்ட் போட்டியில் 11057 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர், அதிக டெஸ்ட் சதங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை குக் தன்னகத்தே கொண்டுள்ளார்.

sports-cook

Related posts: