அசத்திய ரசல்: 34 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றி!

Monday, April 29th, 2019

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 2 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் என்ரு ரசல் ஆட்டமிழக்காது 40 பந்துகளில் 8 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 80 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மும்பை அணி சார்பில், ஆர்திக் பாண்டியா 34 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 91 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக என்ரு ரசல் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை , நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இப்போட்டி , ரோயல் செலன்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் , பதிலளித்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

டெல்லி அணி சார்பில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட சிகர் தவான் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: