இலங்கை கிரிக்கெட் சபையுடன் 65 வீரர்களுக்கு புதிய ஒப்பந்தம்!

Thursday, October 13th, 2016

இளையோர், வளர்ந்து வரும் மற்றும் முதுநிலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக, இலங்கை கிரிக்கெட் 65 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த 65 கிரிக்கெட் வீரர்களுக்குமான இந்த ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கைச்சாத்திடப்படவுள்ளன.

முதற்கட்ட ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி இளையோர், வளர்ந்து வரும் மற்றும் முதுநிலை வீரர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஊதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

இதன்படி முதுநிலை கிரிக்கெட் வீரர்களின் பிரிவு வயது அடிப்படையில் தெரிவு செய்யப்படும். 30 வயதுக்கு மேற்பட்ட, தேசிய மற்றும் உள்ளூர் விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 2015/16 பிரீமியர் லீக் போட்டிகளில் 600 ஓட்டங்களுக்கு மேல், அல்லது 38 விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் இந்தப் பிரிவில் உள்வாங்கப்படுவார்கள்.

இந்த பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ள 17 வீரர்களும் மாத வருமானமாக, சராசரியாக 75,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய்க்கு இடைப்பட்ட ஊக்க தொகையை பெற்றுக்கொள்வார்கள்.

2014/15க்குரிய ஆண்டுகளில் முதல்தர தேசிய ஒப்பந்தத்திற்கு தகுதி பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர, அண்மைக்கால போட்டிகளில் ஏற்பட்ட பின்னடைவுகளால் இந்த சிறப்பு முதுநிலை பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார். அதேநேரம், 2015ஆம் ஆண்டில் தேசிய அணிக்காக விளையாடிய அஜந்த மென்டிஸ்சும் இரண்டாம் தர தேசிய ஒப்பந்தத்திலிருந்து தரமிறக்கப்பட்டு இந்த 17 வீரர்களை கொண்ட முதுநிலை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபாலவின் கருத்துக்கு அமைய, இந்த முதுநிலைப் பிரிவானது, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு மேலுமொரு வருடத்துக்கு உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்கிறது.

மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் பலர் இன்னும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த ஊக்க தொகைக்கு தகுதி பெற்றவர்கள் என ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும் சந்திப்பில் திலங்க சுமதிபால தெரிவித்தார்

19-−23 வயதுக்கும் இடைப்பட்ட, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கும் 24 கிரிக்கெட் வீரர்கள், இளையோர் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இலங்கை ஏ அணி, இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதே வேளை உள்ளூர் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் அனைவரும் இளையோர் பிரிவில் உள்வாங்கப்படுவார்கள்.

வளர்ந்து வரும் பிரிவு அல்லது ‘பி” பிரிவுக்கு 24-29 வயதுக்கு இடைப்பட்ட வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள், வளர்ந்து வரும் அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் இலங்கை ஏ அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வீரர்களுக்கு 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வீரர்களுக்குரிய தேசிய ஒப்பந்தங்கள் பட்டியலின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு இலங்கை தேசிய கிரிக்கெட், தேர்வாளர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

அதேநேரம் தேசிய தர அல்லது முதல் தர ஒப்பந்தத்துக்காக தேசிய அணி வீரர்கள் 28 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாத இறுதியில், ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கு முன்பு அவை கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளையோர் வீரர்கள்

சரித் அசலங்க, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, வணிந்து ஹசரங்க, விஷாத் ரன்திக்க, மனோஜ் சரத்சந்திர, கவிந்து குலசேகர, ரமேஷ் மென்டிஸ், லசித் எம்புல்தெனிய, பிரியமல் பெரேரா, சஹான் நானயக்கார, லஹிரு மிலந்த, மினோத் பானுக, பபசர வடுகே, லசித் அபேரத்ன, சந்துன் வீரகொடி, அஞ்சேலோ ஜயசிங்க, அனுக் பெர்னாண்டோ,ஷேஹான் மதுஷங்க, ஹஷான் துமிந்து, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய

வளர்ந்து வரும் வீரர்கள்

மதுக்க லியனபதிரன, சஞ்சய சத்துரங்க, லஹிரு மதுஷங்க, பானுக ராஜபக்ச, உமேஷ் கருணாரத்ன, கமிந்து கனிஷ்க, முஹம்மத் தில்ஷாத், கசுன் மதுஷங்க, ரமேஷ் புத்திக்க, விமுக்தி பெரேரா, தில்ஷான் முனவீர, மாதவ வர்ணபுர, மலிந்த புஷ்பகுமார, சசித்ர சராசிங்க, பிரபாத் ஜெயசூரிய, ஷெஹன் ஜெயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, ரமித் ரம்புக்வெல்ல, உதார ஜெயசுந்தர, சதுரங்க டி சில்வா, அஷன் ப்ரியஞ்சன், சமிந்த பண்டார, லஹிரு கமகே, இசுரு உதான.

முதுநிலை வீரர்கள்

ஜீவன் மென்டிஸ், பர்விஸ் மஹரூப், மஹேல உடவத்த, சுராஜ் ரந்திவ், ஜெகன் முபாரக், நிசல் ரன்திக்க, சாமர சில்வா, தரங்கா பரணவிதான, அஜந்த மெண்டிஸ், குலசேகர, ஹசந்த பெர்னாண்டோ, கயான் சிரிசோம, டில்ஹாரா பெர்னாண்டோ, டிஎன் சம்பத், சரித்த புத்திக்க, அசேல குணரட்ன, நதீர நாவல .

784d04col132444383_4879297_12102016_aff_cmy

Related posts: