Galaxy J1 Mini புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்
Saturday, March 12th, 2016
சம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலாக பிலிப்பைன்ஸ்சில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 4 அங்கு அளவுடையதும், 800 x 400 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad core 1.2Ghz Processor, பிரதான நினைவகமாக 768MB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கமெரா என்பனவற்றுடன் 1500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது.
Related posts:
சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்!
அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!
உடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்!
|
|
|


