கொலம்­பியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரி­யாளின்!

Wednesday, May 25th, 2016

கொலம்­பிய புளோ­ரிடா பிளாங்கா நக­ரி­லுள்ள கன்னி மரி­யாளின் உரு­வச்­சி­லை­யி­லி­ருந்து கண்ணீராக குருதி வழிந்து வரு­வ­தாகத் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து அந்­ந­க­ருக்கு பெரு­ம­ளவு யாத்திரி­கர்கள் படை­யெ­டுத்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன

மேற்­படி நிகழ்வை பிராந்­திய மக்­களில் பெரும்­பா­லானோர் இறை அற்­பு­தங்­களில் ஒன்­றாகக் கருதுவ­தாக கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் அந்த நகர கத்­தோ­லிக்க தேவா­லயம் விமர்­சனம் எதனையும் வெளியி­ட­வில்லை

எனினும் மேற்­படி நக­ருக்கு அரு­கி­லுள்ள புக­ர­மன்கா நகரைச் சேர்ந்த பேராயர் தெரி­விக்­கையில், இந்த தகவல் குறித்து மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­படக் கோரி­யுள்ளார்

உள்ளூர் மத­போ­த­க­ரான ஜோர்ஜ் எலி­யசெர் கார்­சியா இந்த சம்­பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், மக்­களை இவ்­வாறு திரண்டு வரச் செய்­வது யாத்­தி­ரை­களைத் தூண்டும் முகமாகவோ அன்றி வர்த்­தக நோக்­க­மா­கவோ இருக்க வாய்ப்­புள்­ள­தாக கூறினார்

இந்­நி­லையில் உள்­ளூர்­வா­சிகள் இது உண்­மை­யி­லேயே அற்­பு­தமா அல்­லது இதற்கு விஞ்­ஞான ரீதியான விளக்கம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தமக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கத்தோலிக்க தேவாலய பிரதிநிதிகளிடம் கோரியுள்ளனர்

Untitled-6 copy

Untitled-7 copy

Related posts: